மே மாத ராசி பலன்கள் 2024 - கடகம்

மே மாத ராசி பலன்கள் 2024 - கடகம்

திடமான மனவலிமை கொண்டிருக்கும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு மூன்றாம் பார்வையாக பார்வையிடுவதால், இதுவரை இருந்த பலவிதமான கஷ்டங்களும், வீண் அலைச்சலும், உடல்நல குறைபாடுகளும் இனி விலகும். சொல்ல நினைத்ததை சொல்லாமல் பல காலம் தயங்கி வந்தீர்கள். இனி தைரியமாக அதை சொல்லி விடுவீர்கள். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு விதமான மாற்றங்கள் உங்களின் வாழ்க்கையில் சந்தித்து வந்தீர்கள். அதிலிருந்து மீண்டு உங்களின் எண்ணங்களை செயல்படுத்த துவங்குவீர்கள். 
 
குரு லாபஸ்தானத்திலிருந்து முயற்சிகளின் ஸ்தானத்தை பார்வை இடுவதால் உங்கள் முயற்சி வெற்றியைத் தரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை சனியும், குருவும் பார்ப்பதால் பூரவீகச் சொத்து சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
 
வழக்கு இருந்தால் விரைவில் முடிவுக்கு வரும். காலத்தையும். நேரத்தையும் விரையம் செய்யாமல் குறித்த நேரத்தில் எல்லாவற்றையும் செய்து விடுவீர்கள். அட்டம சனி காலம் என்பதால் பிணையம் இடுவதும். பிறருக்கு பணம் வாங்கி தருவது. சிறிய முதலீடுகள் மூலம் ஒன்லைன் தொழில் செய்வது... போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
 
குடும்ப சுமைகள் குறையும். திருமண தடைகள் நீங்கி, நல்ல வரன் அமைய பெறுவீர்கள். தாயார் உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும். கலையின் ஆர்வத்தால் பல நிறுவனங்களில் முயற்சி செய்தும் பலன் இல்லாமல் போன நிலை மாறி நல்ல வாய்ப்பு உங்களுக்கு தேடி வரும்.
 
உயர்ந்த இடத்திலிருந்து தாழ்ந்தவர்களை பார்த்து நல்ல குணங்களையும், செயல்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசியல் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சகோதரர்களின் உறவு ஒன்றாக இருக்கும். படித்த கல்விக்கு தகுந்த வேலை கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். 
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
02-05-2024 வியாழன் பகல் 11.44 முதல் 04-05-2024 சனி பகல் 02.11 மணி வரை.
 
29-05-2024 புதன் இரவு 07.53 மண் முதல் 31-05-2024 வெள்ளி இரவு 10.25 மணி வரையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, மஞ்சள், ஓரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
திங்கள், வியாழன், வெள்ளி.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.